Skip to main content

Posts

Showing posts from June, 2021

படித்ததில் பிடித்தது- தெரிந்த கதை தெரியாத துணுக்கு

தெரிந்த கதை தெரியாத துணுக்கு படித்ததில் பிடித்தது #Sharedpost மாமன்னர் பரீக்ஷித்தின் இரண்டு கதைகள்  மாமன்னர் பரீக்ஷித்தின் கதையை எடுத்துரைப்பதில், ஸ்ரீமத் பாகவதமும் மஹாபாரதமும் வேறுபடுகின்றன. என்ன வேறுபாடு? ஏன்?  ஸ்ரீமத் பாகவதத்தின்படி, ஏழு நாளில் தக்ஷகனால் மரணமடைவோம் என்பதை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் உடனடியாக அனைத்தையும் துறந்து ஸ்ரீமத் பாகவதத்தைக் செவியுற்றார், ஏழாம் நாள் முடிவில் மனமகிழ்ச்சியுடன் தக்ஷகனால் தீண்டப்பட்டு மரணத்தை ஏற்றார்.  மஹாபாரதத்தின்படி, தனக்களிக்கப்பட்ட சாபத்தை அறிந்த மாமன்னர் பரீக்ஷித் யாரும் அணுக முடியாத கடுமையான கோட்டையைக் கட்டி அதனுள் தனக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டார். தக்ஷகனால் உள்ளே நிச்சயம் வர முடியாது என்று அவர் நினைத்திருந்த தருணத்தில், ஒரு பழத்தினுள் புகுந்த தக்ஷகன், அதனை பரீக்ஷித் கடிக்கும்போது வெளியே வந்து, அவரைத் தீண்டி மரணத்தை வழங்கினான்.  ஸ்ரீமத் பாகவதத்தின் படி பரீக்ஷித் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை, ஆனால் மஹாபாரதம் வேறு விதமாகக் காட்டுகிறது. ஏன், எவ்வாறு புரிந்து கொள்வது?  ஒரு பிரச்சனையும் இல்லை. பிரம்மாவின...

படித்ததில் பிடித்தது- கதை சொல்லும் கதை

படித்ததில் பிடித்தது கதை சொல்லும் கதை ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார். அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார். இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாக...

படித்ததில் பிடித்தது-அறிவோம் சட்டம்

நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் "வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது" போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும். இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் 14.11.2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு என்னவென்றால், வாதிகள் இருவர், 1998ஆம் ஆண்டு தங்களது Maruti Zen காரில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு தங்களது காரின் சாவியினை கொடுத்து வாலட் பார்க்கிங் செய்துள்ளனர். அதன் பின்பாக, நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டு விடுகிறது. ஹோட்டல் நபர்களிடம் கேட்டதற்கு, பார்க்கிங் ரசீதில் கொடுக்கப்பட்ட படி, "In the event of any loss, theft or damage, the management shall not be held responsible for the same and the guest shall have no claim whatsoever against the management.” திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்...

எம் பொண்ணு

"எம் பொண்ணு" அப்படீன்னு சொல்லிப் பாருங்க நெஞ்சு சும்மா ஜில்லுன்னு ஆயிடும்.  சொல்லும் போதே சிலிர்ககும் இல்லையா? அதே சிலிர்ப்பு சுமார் 18 வருஷத்துக்கு முன்னாடி மொத முறையா எனக்கு வந்தது..  மூத்தவள் வந்தாள். என் பொண்ணு குப்புர‌ படுத்தாள் தெரியுமா? எடு எடு போட்டோ எடு.... ஏய் எம் பொண்ணு நடக்கறா அந்த வீடீயோ எடு.... மாடி ஜன்னல் வழியா‌ நா‌ வரத‌ எம்பி பாத்து நுனி கால்ல ஓடி வந்து... ஒரு‌ ஜம்ப்... மூணு வயசு பூங்கொத்து... எம்‌ பொண்ணு.. அந்த நம்பிக்கை.. இது போன்ற‌ பல நினைவுகள். எம் பொண்ணு எனக்கு செல்லம், முதல் நாள் ஸ்கூல் போகும் போது என் விரலை இருக்க பிடித்த படி வியப்பாக புது உலகத்தை பார்த்தாள். அவ கணணுல கொஞ்சம் தண்ணீ ஆனா இதழோறம் சிரிப்புடன் ஸ்கூல் உள்ள அவ போன‌போது என் கண்ணுல தண்ணீ... அப்போ, ஒரு ஏழேட்டு வயசு இருக்கும் அவளுக்கு, ஆபிசிலிருந்து தலைவலியோட வந்த அவ அம்மா மார்கெடுக்கு போயிருந்தா.. "அப்பா இரு‌ வரறேன்னுட்டு" போய் சூடாக காபி,மேகி நூடுல்ஸ் கொடுத்தது.. சூப்பர் நினைவு... "அப்பா, யு நோ வாட்" அப்படீன்னு ஆரம்பிச்சு அவ பேசரத, பாக்க பாக்க.... என் பொண்ணு... "அந்த ப...

எங்க ஊரு மெட்ராஸூ அதுக்கு நாங்க தானே அட்ரஸூ

பொங்க வைக்க நானும் வரேன். ஆமா சார், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு வெளியூரில் தான் நடந்தது சென்னை ஆளுங்க சும்மா வெட்டியா வேடிக்கை பார்த்தாங்க... அது மட்டுமா செஞ்சாங்க இவங்க?  காவிரி தண்ணி வரலன்ன இங்க தான் போரட்டம் மீத்தேன் இங்க தான் போராட்டம், அரசு இங்க தானே... அது தான்.  நிம்மதியா வேல பாக்க போயிடுவாங்க... போராட்ட பாதிப்பு எதுவும் கிடையாது.. பஸ் ஓடலன்னா பைக்கு பைக்கு இல்லன்னா நடந்துன்னு அவங்க பாட்டுக்கு சந்தோஷமா (அப்படியா?) வேல பாப்பாங்க.  அதுல பாருங்க சென்னைக்கு ஒரு நாளுக்கு எத்தனை பேரு உள்ள வராங்க, பொழப்பு தேடி... அவங்களுக்கு ஒன்னும் பண்ணறதில்ல சென்னைவாசிங்க .‌வந்தவங்க எல்லாம் வெறுங்கையோடு திரும்ப போயிடராங்க..‌என்ன‌, நான் சொல்லறது. தண்ணீ கஷ்டம் இங்க இல்ல... ரோட்ல தேனாறும், பாலாறும் தான் ஓடுது...இல்ல. ஊருல குப்பை ஜாஸ்தி, கூவம் பாயுது ஆனா‌ நாறுது. ஆமா சார் இதெல்லாம்‌ வெளியூர்‌ ஆளுங்க செய்யல.. சென்னை காரங்க ஆள் வைச்சு குப்பை போடறாங்க.. இல்ல சென்னையில பாதி ஜனம் வெளியூராட்கள் தான்.. இது எப்படீன்ன "நான் வருவேன்.. சம்பாதிப்பேன்... சொத்து சேர்ப்பேன் ஆனா சென்னையை திட்டுவேன்" நல்லா...

படித்ததில் பிடித்தது 1

படித்ததில் பிடித்தது ஒரு இல்லத்தரசியின் குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை...  எது மேட்டர் தெரியுமா?  சமைக்குறது; இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..  வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும்.  பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.  ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே விடியும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.  இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் ...

கொரோனா (வாக்ஸினேஷன்) க்ரானிகல்ஸ் 2021

கொரோனா (வாக்ஸினேஷன்) க்ரானிகல்ஸ்  கடந்த டிசம்பர் மாதம் (2020) கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் பரபரப்பு ஏற்ப்படுத்தி கொண்டுருந்த தருணம். என் குடும்பத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அரசியல்வாதிகள் முதல் காய்கறி விற்ப்பவர் வரை எத்துனை அபிப்ராயம்?  " டேய், இது டெஸ்டிங்கே பண்ணல , சும்மா ரிஸ்க் எடுக்காதே"  "உனக்கு தெரியுமா?" கலவரமாய் ஆரம்பித்தான் என் நண்பன் ".. அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்து கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்தார், அப்புறம் என்ன ஆச்சோ தெரியல.. அனேகமாக.." என்று கொக்கி போட்டு நிறுத்தினான். எனது கான்ஸ்பியரசி பேசும் நண்பர்கள் குசுகுசு என்று மாடுலேஷனை மாற்றி  " எல்லாம் மாஃபியா மாமா, ஏமாத்தராங்க" "உலக வங்கி கிட்ட மானியம் வாங்கி ஏழை நாடுகளில் டீரையல் பண்றாங்க" இதில் நமது நடிகர் மன்சூர் அலிகான் வேறு.  இப்படி எத்தனையோ கன்பூஷன் நடுவே எனது முதல் டோஸ் தடுப்பூசி. எங்கள் வீட்டில் பெற்றோரை யாரோ குழப்பிவிட்டனர். நான்‌ தடுப்பூசி போட்டுக் கொண்டு அவர்களை போட்டுக் கொள்ள வைத்தேன்.  இதற்கு நடுவே," கோவெக்ஸின...

ஷுகர் டு நோ ஷுகர்.

படித்ததில் பிடித்தது. ஷுகர் டு நோ ஷுகர். "330, இது டேஞ்சர்‌", என்றது என் மனம். "இன்ஸுலின்‌ ஸ்டார்ட், பணணிடலாம் " என்றார்‌ டாக்டர். "சார்" , என்று பயந்தபடியே துவங்கினேன், " ஒரு‌ 15 நாள்‌ விட்டு ஸ்டார்ட் பண்ணலாம்" என்றேன். அரை‌மன்துடன்‌ ஓகே என்றார் என்‌ டாக்டர். ஒரே மாதம் தான்‌, எனது ஷுகர்‌ லெவல் 133 PP. மாயமில்லை, மந்திரமில்லை, சார். இரண்டே விஷயம் தான். சாரி,மூன்று விஷயம்‌ தான். 1. உணவு : சிறுதானிய உணவு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, ஜவார் சோளம். இதுல டிபன்‌ ஐட்டம் பண்ணலாம் ஆனால் எனக்கு சாம்பார், ரசம், கூட்டு என்று கலந்து சாப்பிட பிடித்தது.‌ என் ஃபேவரிட் வரகரிசி. (அரிசிக்கும், தேங்காய்க்கும் டாடா). மேலும் காபி, டீ-யில் நோ ஷுகர். கொஞ்சம் சுண்டல் உண்டு மாலையில் (நோ தேங்காய் ப்ளீஸ்). எப்பவாவது கொய்யா (நோ பழம், ஒன்லி காய்வாட்டா இருக்கும் பழம் ஒன்லி) 2. உடற்பயிற்சி: ரொம்ப‌ இல்ல சார்‌ ஜஸ்ட்‌ வாக்கிங் மட்டும். ஹாலுக்கும்‌ பெட்ரூமுக்கும் மட்டும் வாக்கிங் போன நான் இன்னிக்கு தினமும் 3 KM-லில் ஆரம்பித்து 7 KM-இல் நிற்கிறதே, இது இரண்டாவது க...