Chennai Anthem ஒரு பெரிய நன்றி. இந்த "என் சென்னை யங் சென்னை" என்ற ஒரு நிகழ்வு, ஒரு நிமிடத்தில் உதித்த ஒரு எண்ணம். இன்று ஒரு நிறைவான ஒரு விழாவாக வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் ஒரு நெகிழ்வான தருணம். விருது வாங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பும், வாழ்த்துக்களும். நாங்கள் தி ஐடியா ஃபாகட்ரி.. ப்ராண்ட் ப்ளிடஸுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்விற்கு நன்றி கூறும் பெரிய பொறுப்பு , இங்கே எனக்கு. இந்த நிகழ்வை மனதிற்கு பிடித்தவர்களுடன் கொண்டாடுவது சிறப்பு. இங்கு வந்துள்ள நமது ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. இந்த ஒரு விருதுகளை நிறுவியது மட்டும் தான் நாங்கள். பின்புலத்தில் களப்பணி செய்து வருது வாங்குபவர்களின் பணியை முன்நிறுத்தியது எங்கள் வள்ளிதாசன் என்ற ஆளுமை. அவருக்கும் அவரது அணியில் உள்ள சகோதரி நிவேதிதா லூயிஸ், எனது நண்பர் சுட்டி கணேசன், சகோதரி சஹானா அனைவருக்கும் எங்களது நன்றி. En Chennai Young Chennai ப்ரிட்டோ இந்த பாடலின் கதாநாயகன். நிஷாந்த் அந்த பாடலின் உயிர் வரிகள். அண்ணன் அந்தோணி தாசன், அன்பு மகள் அல்கா அஜித், டூட் டோணி செபா...