"எம் பொண்ணு" அப்படீன்னு சொல்லிப் பாருங்க நெஞ்சு சும்மா ஜில்லுன்னு ஆயிடும்.
சொல்லும் போதே சிலிர்ககும் இல்லையா? அதே சிலிர்ப்பு சுமார் 18 வருஷத்துக்கு முன்னாடி மொத முறையா எனக்கு வந்தது..
மூத்தவள் வந்தாள்.
என் பொண்ணு குப்புர படுத்தாள் தெரியுமா? எடு எடு போட்டோ எடு....
ஏய் எம் பொண்ணு நடக்கறா அந்த வீடீயோ எடு....
மாடி ஜன்னல் வழியா நா வரத எம்பி பாத்து நுனி கால்ல ஓடி வந்து... ஒரு ஜம்ப்... மூணு வயசு பூங்கொத்து... எம் பொண்ணு.. அந்த நம்பிக்கை..
இது போன்ற பல நினைவுகள்.
எம் பொண்ணு எனக்கு செல்லம், முதல் நாள் ஸ்கூல் போகும் போது என் விரலை இருக்க பிடித்த படி வியப்பாக புது உலகத்தை பார்த்தாள்.
அவ கணணுல கொஞ்சம் தண்ணீ ஆனா இதழோறம் சிரிப்புடன் ஸ்கூல் உள்ள அவ போனபோது என் கண்ணுல தண்ணீ...
அப்போ, ஒரு ஏழேட்டு வயசு இருக்கும் அவளுக்கு, ஆபிசிலிருந்து தலைவலியோட வந்த அவ அம்மா மார்கெடுக்கு போயிருந்தா.. "அப்பா இரு வரறேன்னுட்டு" போய் சூடாக காபி,மேகி நூடுல்ஸ் கொடுத்தது.. சூப்பர் நினைவு...
"அப்பா, யு நோ வாட்" அப்படீன்னு ஆரம்பிச்சு அவ பேசரத, பாக்க பாக்க.... என் பொண்ணு...
"அந்த புக்க எப்டீப்பா படிச்ச? எனக்கு புரியல, வா, கொஞ்சம் எக்ஸ்பளைன் பண்ணு" என்பாள், "ஓ, அது அப்படி யா" ன்னு தலையாட்டி சிரிப்போ எம்பொண்ணு.
காலேஜ் முத நாள் வீட்டிலிருந்து கிளம்பும் போது... "என் கைய மறு படி இறுக்கி பிடிதச்சா " எம் பொண்ணு...
"அப்பா என் லைசன்ஸ் எப்போ வரும்?" கேட்ட போது, வாவ், சூப்பர் ஃபீலிங்.
இன்னிக்கு அவளுக்கு பிறந்த நாள்.
வாழ்த்துக்கள் குட்டீ.
Happy Birthday to you, Vaishnavi. I will read out this one to you...
எம் பொண்ணு.
2020 October
Comments
Post a Comment