Skip to main content

படித்ததில் பிடித்தது-அறிவோம் சட்டம்

நமது வண்டிகளை திரையரங்குகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நிறுத்திவிட்டு செல்லும் பொழுது நமக்கு கொடுக்கப்படும், ரசீதுகளில் "வண்டி தொலைந்தால், அதற்கு நிறுவனம் பொறுப்பு ஏற்காது" போன்ற வாசகம் குறிப்பிட்டிருக்கும். ஆகவே, ஒரு வேளை அவர்களின் நிறுத்தத்தில் வண்டி தொலைந்து விட்டால், அவர்களை சட்டப்படி நாம் கேட்க இயலாது என்பதே நமது புரிதலாக இருக்கும்.

இதனை அடிப்படையாக கொண்ட ஒரு வழக்கில் 14.11.2019 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. வழக்கு என்னவென்றால், வாதிகள் இருவர், 1998ஆம் ஆண்டு தங்களது Maruti Zen காரில் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். பிறகு தங்களது காரின் சாவியினை கொடுத்து வாலட் பார்க்கிங் செய்துள்ளனர். அதன் பின்பாக, நிறுத்தப்பட்ட கார் திருடப்பட்டு விடுகிறது. ஹோட்டல் நபர்களிடம் கேட்டதற்கு, பார்க்கிங் ரசீதில் கொடுக்கப்பட்ட படி, "In the event of any loss, theft or damage, the management shall not be held responsible for the same and the guest shall have no claim whatsoever against the management.” திருடு போன காருக்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்று கூறி விடுகின்றனர். 

திருடு போன காருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடு கொடுத்து விடுகிறது. அதனை தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனம் ஹோட்டல் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நஷ்ட ஈடு கேட்டு மாநில நுகர்வோர் மன்றத்தில் வழக்கினை தொடுக்கின்றனர். மாநில நுகர்வோர் நீதிமன்றம் அவ்வழக்கில் ஹோட்டல் நிறுவனத்தினை ரூபாய் 2,80,000 நஷ்ட ஈடாக கொடுக்க உத்தரவு இடுகிறது, அதனை எதிர்த்து ஹோட்டல் நிறுவனர் தேசிய நுகர்வோர் மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார். அங்கும் மேற்கூறிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. 

அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு வருகிறது, வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், எப்பொழுது ஹோட்டல் நிறுவனம் தனது வாடிக்கையாளரிடம் இருந்து காரை பெற்று கொண்டு, ரசீதை கொடுத்தார்களோ அப்பொழுதே நிறுவனத்திற்கும், வாடிக்கையாளருக்கும் இடையில் Bailment ஏற்பட்டு விட்டது. ஆகவே காரை, பொறுப்புடன் திருப்பி கொடுக்க வேண்டிய கடமை நிறுவனத்திற்கு வந்து விட்டது. ரசீதில், குறிப்பிட்டபடி அவர்கள் தங்களுடைய கடமையில் இருந்து எவ்விதத்திலும் தப்பித்து கொள்ள முடியாது என்று கூறி, வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டினை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

Taj Mahal Hotel vs. United India Insurance Company Ltd. (CIVIL APPEAL NO. 8611 OF 2019)

நன்றி George Marks (அறிவோம் சட்டம்) 

Comments

Popular posts from this blog

Land, Lockers, and Light-Speed Travel: A Rural Futurist’s Musings

  Land, Lockers, and the Layer Beyond In the heart of Tamil Nadu, we’re surrounded by land that grows cane, people who grow ideas, and lockers that — until now — stayed silent. But what if these lockers became companions ? Picture this. A farmer walks into a locker room. No screen. No password. Just a gentle, intelligent voice: “Vanakkam, Meenakshi Amma. Your daughter’s gold chain is safe. Would you like to invest ₹500 this month into a short-term fund?” No paper. No forms. No confusion. Just dignity delivered through data . That’s screenless tech with soul . 🗣️ When Voice Becomes the New Touch We’re entering an era where screens shrink… and experiences expand. A visually impaired person can hear their balance and authorize a transfer — no phone needed. A senior citizen can invest in mutual funds through a voice prompt — no app, no anxiety. A rural mother can access her locker and savings with just her spoken word. This isn’t some elite vision. It’s technology tha...

The Origin of Languages and the Enigma of Tamil

A Two-Part Exploration into Lemuria, Lanka, Sumer, and the Timelessness of Tamil Ambulance & Traffic Jam In search of clarity in the noise of history, myth, and language. Recent debates on the antiquity and uniqueness of Tamil — especially in contrast to other Dravidian languages — have brought new attention to age-old questions. Where did Tamil come from? Is it connected to Sumerian? What about the submerged continent of Lemuria or the Ramayana’s Lanka? This two-part essay explores those very ideas, connecting linguistic, cultural, and historical dots — from mythical continents and ancient rivers to the unbroken lineage of a living language. What emerges is not just a defence of Tamil, but a celebration of its enduring, singular character. Part I: The Lost South — Lemuria, Lanka, and Sumerian Shadows 1. Introduction The origin of human language is among the greatest puzzles in anthropology, linguistics, and mythology. While many traditions trace roots to Indo-European or Afro...

படித்ததில் பிடித்தது 1

படித்ததில் பிடித்தது ஒரு இல்லத்தரசியின் குமுறல் சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை...  எது மேட்டர் தெரியுமா?  சமைக்குறது; இன்னைக்கு சமைக்குறது; அப்புறம் நாளைக்கு சமைக்குறது; அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது; சமைச்சுக் கிட்டே இருக்குறது. ஒவ்வொரு நாளும் சமைக்கனும், நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும், புதுசு புதுசா சமைக்கனும், ருசியா சமைக்கனும், அது எல்லார்க்குமே பிடிக்கனும், உப்பு கூடிடக் கூடாது, சோறு குழைஞ்சிடக் கூடாது, பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,  இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..  வேஸ்ட் பண்ணிடக் கூடாது. இருக்குற காச வச்சு சமைக்கனும்.  பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.  ஒவ்வொரு நாளும் விடியுறப்போ, இன்னைக்கு என்ன வாங்கலாம், என்ன சமைக்கலாம், வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு யோசிச்சே விடியும். சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.  இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும். பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும். நாளைக்கும் ...