பொங்க வைக்க நானும் வரேன்.
ஆமா சார், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு வெளியூரில் தான் நடந்தது சென்னை ஆளுங்க சும்மா வெட்டியா வேடிக்கை பார்த்தாங்க... அது மட்டுமா செஞ்சாங்க இவங்க?
காவிரி தண்ணி வரலன்ன இங்க தான் போரட்டம் மீத்தேன் இங்க தான் போராட்டம், அரசு இங்க தானே... அது தான்.
நிம்மதியா வேல பாக்க போயிடுவாங்க... போராட்ட பாதிப்பு எதுவும் கிடையாது.. பஸ் ஓடலன்னா பைக்கு பைக்கு இல்லன்னா நடந்துன்னு அவங்க பாட்டுக்கு சந்தோஷமா (அப்படியா?) வேல பாப்பாங்க.
அதுல பாருங்க சென்னைக்கு ஒரு நாளுக்கு எத்தனை பேரு உள்ள வராங்க, பொழப்பு தேடி... அவங்களுக்கு ஒன்னும் பண்ணறதில்ல சென்னைவாசிங்க .வந்தவங்க எல்லாம் வெறுங்கையோடு திரும்ப போயிடராங்க..என்ன, நான் சொல்லறது.
தண்ணீ கஷ்டம் இங்க இல்ல... ரோட்ல தேனாறும், பாலாறும் தான் ஓடுது...இல்ல. ஊருல குப்பை ஜாஸ்தி, கூவம் பாயுது ஆனா நாறுது. ஆமா சார் இதெல்லாம் வெளியூர் ஆளுங்க செய்யல.. சென்னை காரங்க ஆள் வைச்சு குப்பை போடறாங்க.. இல்ல
சென்னையில பாதி ஜனம் வெளியூராட்கள் தான்.. இது எப்படீன்ன "நான் வருவேன்.. சம்பாதிப்பேன்... சொத்து சேர்ப்பேன் ஆனா சென்னையை திட்டுவேன்" நல்லா இருக்கே நியாயம்..
நாங்க மட்டும் இங்கிருந்தால் நிம்மதியா இருந்நிருப்போமோ?வரவங்களவா அப்படீன்னு கூப்பிட்டு அப்புறம் அவங்க திட்டும் பொழுது .. ஷப்பா முடியல....
வெளியூர் ஆளுங்க ஓட்டும் போட மாட்டாங்க ஆனா வாக்காளர் அடையாள அட்டை மட்டும் வாங்கி வைச்சு கிட்டு தேர்தல் அன்னிக்கு ஊரபாக்க போயிடுவாங்க. அதுல ஒரு பெரும
அப்புறம் திமுக கோட்டைன்னு வசவு வேற... அடபோங்க சார்
இது தருமமிகு சென்னை சார்.
"எங்க ஊரு மெட்ராஸூ அதுக்கு நாங்க தானே அட்ரஸூ"
Comments
Post a Comment