Chennai Anthemஒரு பெரிய நன்றி.
இந்த "என் சென்னை யங் சென்னை" என்ற ஒரு நிகழ்வு, ஒரு நிமிடத்தில் உதித்த ஒரு எண்ணம். இன்று ஒரு நிறைவான ஒரு விழாவாக வந்திருப்பது எங்கள் அனைவருக்கும் ஒரு நெகிழ்வான தருணம்.
விருது வாங்கிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பும், வாழ்த்துக்களும்.
நாங்கள் தி ஐடியா ஃபாகட்ரி.. ப்ராண்ட் ப்ளிடஸுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்விற்கு நன்றி கூறும் பெரிய பொறுப்பு , இங்கே எனக்கு.
இந்த நிகழ்வை மனதிற்கு பிடித்தவர்களுடன் கொண்டாடுவது சிறப்பு. இங்கு வந்துள்ள நமது ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
இந்த ஒரு விருதுகளை நிறுவியது மட்டும் தான் நாங்கள். பின்புலத்தில் களப்பணி செய்து வருது வாங்குபவர்களின் பணியை முன்நிறுத்தியது எங்கள் வள்ளிதாசன் என்ற ஆளுமை. அவருக்கும் அவரது அணியில் உள்ள சகோதரி நிவேதிதா லூயிஸ், எனது நண்பர் சுட்டி கணேசன், சகோதரி சஹானா அனைவருக்கும் எங்களது நன்றி.En Chennai Young Chennai
ப்ரிட்டோ இந்த பாடலின் கதாநாயகன்.
நிஷாந்த் அந்த பாடலின் உயிர் வரிகள்.
அண்ணன் அந்தோணி தாசன், அன்பு மகள் அல்கா அஜித், டூட் டோணி செபாஸ்டியன், இவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகள்.
பாடல் வரிகளை உயிர்ப்பித்து "ஒரு மின்சார வைப்" கொடுத்த நிஷாந்த், உங்களுக்கு சிறப்பு நன்றி.
இந்த விருதை பற்றி சொன்னவுடன் எங்கள் முயற்சிக்கு உயிர் கொடுத்த நாகா ஃபுட்ஸ், விவேக்ஸ், ஈக்குவிடாஸ் வங்கி ஆகியோருக்கு எங்களுக்கு நன்றிகள் பல.
திரு மாஃபா பாண்டியராஜன் அவர்களை இந்த விழாவிற்கு அழைத்தவுடன் மிக ஆர்வமாக சம்மதித்து விழா விவரங்களை கேட்டறிந்தார் அவர். நன்றி சார்.
திரு சுரேஷ் சம்மந்தம் dream Tamilnadu அவருக்கு எங்களுக்கு சிறப்பு நன்றி.
எங்களுக்கு க்ரியா ஊக்கி மைம் கோபி. ஒரு வருடம் முன்னால் பார்த்த பொழுது கூறிய வார்த்தைகள் எங்களுக்கு இன்றும் க்ரியா ஊக்கி. நன்றி நண்பரே.
தாமு சார் அவருக்கு எங்கள் நன்றி.
எங்களது குடும்பத்தினர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.
இவ்விழாவை சிறப்பாக நடத்த உதவிய ப்ராண்ட் ப்ளிடஸ் team அனைவருக்கும் எங்களுது நன்றி சிறப்பாக தீபக்.
முத்து எங்கள் சொத்து. ஊடங்களை நண்பர்களை ஒருங்கிணைத்த அவருக்கும் எங்களது நன்றி.
லீ மேஜிக் லான்டரன் குழுவினருக்கும் எங்களது நன்றி.
என் சென்னை யங் சென்னை.
நன்றி ! நன்றி!
அன்பும், வாழ்த்துக்களும்
Comments
Post a Comment